100 முறை அல்ல 1000 முறை காதலைச் சொல்லவும் தயார்: விமர்சனங்களுக்கு ராஷ்மிகா தெறி பதில்!
நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும், தங்களது திருமண முடிவு குறித்து பேசியிருந்தனர்.

முதலில் விஜயிடம் திருமணம் குறித்து பேசியது தான்தான் என்றும், முடிவெடுக்க விஜய் தேவரகொண்டா ஓராண்டு எடுத்துக்கொண்டதாகவும் ராஷ்மிகா தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் குறித்து இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ராஷ்மிகா பதிவு வைரல்
இதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, “விஜயை மீண்டும் மீண்டும் காதலுடன் தேர்வு செய்வேன். அவருக்கு 1,000 முறை கூட Propose செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வாழ்க்கையின் கடினமான காலங்களில் விஜய் உறுதுணையாக இருந்தவர் விஜய், இணையத்தில் பரவும் தவறான தகவல்களையும் எடிட் செய்யப்பட்ட காணொளிகளையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களது காதல் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த விவகாரத்தில் தனது குடும்பத்தினரை இழுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |