வீட்டில் தூங்கிய சிறுவனை ஹெலிகப்டரில் தேடிய பொலிசார்

Published:Thursday, 28 February 2013, 11:23 GMTUnder:General

காணாமல் போனதாக பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்ட சிறுவன் தனது வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்த ருசிகர சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.

பிரிட்டனின், ஸ்வான்சீ நகரை சேர்ந்த சமந்தா - ஆண்ட்ரூ தம்பதியினர் தங்கள் ஐந்து வயது மகன் ஜென்சன் லோரி கடந்த 18ம் திகதி இரவு காணாமல் போனதாக பதட்டத்துடன் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், மோப்ப நாய்கள், ஹெலிகப்டர் சகிதம், ஜென்சன் லோரியை தேடும் படலத்தை தொடங்கினர்.

பொலிசார் மட்டுமல்லாமல் ஆண்ட்ரூவின் நண்பர்கள் பஸ் ஓட்டுனர்கள் உட்பட பலர் சிறுவனை தேடினர். சிறுவன் காணாமல் போன தகவல் ஒயர்லெஸ் மூலம், நகரில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதனிடையே, வீட்டிலிருந்த சிறுவனின் சகோதரி வரவேற்பறையில் இருந்த காற்றடைத்த மெத்தையை தற்செயலாக தூக்கி பார்த்தபோது அதன் அடியில் சிறுவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

காணாமல் போய்விட்டதாக கருதிய தன் மகன், வீட்டுக்குள்ளேயே தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அவன் தாய் அவனை அணைத்துக் கொண்டு சந்தோஷத்தில் கூச்சலிட்டார்.

ஆனால் நடந்தது எதையும் அறியாத அச்சிறுவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.இதனிடையே பையன் கிடைத்த தகவல் தெரிந்ததும் பொலிசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்