சாக்லெட் சுவை தரும் புதுமையான தபால் தலை(ஸ்டாம்பு)

Published:Saturday, 09 February 2013, 08:32 GMTUnder:Invention

பெல்ஜியம் நாட்டு தபால் துறையினர் தங்களது வாடிக்கையாளரை கவரும் விதமாக புதுமையான புதிய 'ஸ்டாம்பு' (தபால் தலை) ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஸ்டாம்பு பின்புறமுள்ள பசையானது சாக்லெட் சுவை கொண்டதாக இருக்கும்.

நாம் நாவில் தடவி ஒட்டும் போது அதன் சுவையை அனுபவிக்க முடியும். 5 விதமாக வெளியிடப்படும் இந்த ஸ்டாம்புகளில் சாக்லெட்டின் பல்வேறு சுவைகள் அடங்கியிருக்கும். வெளிநாடுகளுக்கு அனுப்பும் மெயில்களில் இவை பயன்படுத்தப்படும்.

வருகிற மார்ச் மாதம் 25ம் திகதி வெளிவர இருக்கும் இந்த ஸ்டாம்பின் விலை இந்திய மதிப்பு 350(£5.30) ரூபாய் ஆகும்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்