Published:Tuesday, 15 January 2013, 11:54 GMTUnder:Invention
இந்தோனேஷியாவில் ஜாவாத் தீவில் Probolinggo என்ற பகுதியைச் சேர்ந்த Tengger இனமக்கள் 7,641 அடி உயரமுள்ள Mount Bromo என்ற மலைக்குச் சென்று வினோதமான முறையில் வருடாந்திர விழாவினைக் கொண்டாடுகின்றனர்.
15ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவின் பெயர் Yadnya Kasada ஆகும். இவ்விழாவின் போது நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் கைகளில் வலைகளுடன் ஓர் இராட்சத எரிமலையின் உட்பகுதிக்குள் நடந்துசென்று அங்கு கடவுளுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தல்களை நிறைவேற்றுவர்.
இந்த மக்கள் அரிசி, மரக்கறிகள், பழங்கள் மற்றும் பணம் போன்றவற்றை அவற்றிற்குள் வீசியெறிவதால் தமக்கு அதிர்ஷ்டம் என்று அதிகமாக நம்புகின்றனர்.
இதற்கு முன் மனிதத் தியாகங்களை(குழந்தைகளை எறிதல்) செய்த இம்மக்கள் தற்போது ஏனைய பொருட்களை அதற்குள் எறிந்து கடவுள்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டும் பாரம்பரியமாக மாறிவிட்டிருந்தது.
மேலும் இது பெரும் ஆபத்தானதெனினும், சில உள்ளுர்க்காரர்கள் அந்தக் குழிக்குள்ளும் இறங்கி உள்ளே போடப்பட்டவற்றை எடுக்கவும் செய்கின்றனர். இவ்வாறனவை தமக்கு அதிர்ஷ்டத்தைத் தருமென நம்பியே இதையும் செய்கின்றனர்.








Back to HomePrintReport UsShare with Friends