இவர் தான் மிகச் சிறிய மொடல் அழகனாம்!...

Published:Wednesday, 02 January 2013, 08:20 GMTUnder:General

இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல் அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு போட்டி நடத்தப்பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.

இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தாமஸ்(வயது 28) - பெக்கி(வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.

இவனுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டை படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்