Published:Monday, 31 December 2012, 16:56 GMTUnder:General
உற்சாகத்துடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் 2013ம் ஆண்டிற்குள் நாம் நுழையும் இத்தருணத்தில் கடந்த கால 2012ம் ஆண்டின் நிகழ்வுகளை அசைபோட கடமைப்பட்டிருக்கின்றோம்.
2012 என்றதும் நம் கண்முன் உடனே வந்து செல்வது உலக அழிவும், அது பற்றிய சர்ச்சைகளும் தான். இது உலகை உலுக்கிய சம்பவம் என்றே கூறலாம்.
சில வேடிக்கையான விடயங்களும், சாதனைகள், சாகசங்கள், உணர்வை தட்டி எழுப்பி உணர்ச்சிகரமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தன.
நமது மனிதன் தளத்தில் இது போன்று பலதரப்பட்ட விடயங்களை அவ்வப்போது பார்வையாளர்களுக்கு கொடுத்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் சில விடயங்கள் அனேகரது மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், அவர்களது உணர்வை தட்டி எழுப்பி சற்று வியப்பிலும் ஆழ்த்தின.
இது போன்று 2012ம் ஆண்டில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த சில காணொளிகளின் தொகுப்புகளை பின் நோக்கி பார்க்க உள்ளோம். இதில் சில வேடிக்கையான சம்பவங்களும் அடங்கும்.
சாதனைகள்
உலகத்தின் அழிவுகள் ஒரு பக்கம் காணப்பட்டாலும், நாளுக்கு நாள் மனிதர்களின் சாதனை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் ஒரு செயலினை மனதில் கொண்டு அனைவரையும் வியக்க வைத்த சாதனைகளின் தொகுப்பு.
ஒட்டு மொத்த உலக சாதனைகளின் தொகுப்பு
விபத்துக்கள்
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கப்பட்டு வந்தாலும் விபத்திற்கு பஞ்சமில்லை என்றே கூறலாம்.
சாலை விதிகளை மீறுதல், மது அருந்திவிட்ட வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவு போன்றவற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
அவ்வாறு இந்த ஆண்டு நம்மை சற்று உரையவைத்த காணொளியினை காணலாம்.
பிரபலங்கள்
2012ம் ஆண்டில் சினிமா பிரபலங்களில் மிகவும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்ட விடயம் சினேகா- பிரசன்னா திருமணக் கொண்டாட்டம் பற்றி செய்திகள் தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக அரங்கேறியது இவர்களின் திருமணம்.
இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் மக்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்தது. பட்டத்தையும், வீட்டையும் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பை ஆஜித் பூர்த்திசெய்தார்.
சினேகா - பிரசன்னா திருமணம்
சூப்பர் சிங்கர் ஆஜித்
குற்றங்கள்
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகிவரும் சூழலில் அதற்கான குற்றங்களும் அதிகரித்துதான் வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் திட்டமிட்ட கொலைகளும், திருட்டுக்களும் சற்று நம்மை மெய்சிலிர்க்கத்தான் வைக்கின்றன.
ஜேர்மன் நகைகடையில் திருட்டு
ஹமாஸ் தலைவர் படுகொலை
நாய்க்கூண்டில் குழந்தை
சுவாரசியம்
நாம் வாழும் இந்த உலகில் சில வேடிக்கையான மற்றும் விநோதமான நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. 2012ல் வெளியான சில சுவாரவியமான விடயங்களை நாம் காணலாம்.
பிரபல தொலைக்காட்சியில் சண்டை
துப்பாக்கி படத்தின் கூகுள் பாடல் உருவாகிய விதம்
உலகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய கங்ணம் ஸ்டைல் நடனம்
ஆச்சரியங்கள்
நாட்டில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேலையில் மனிதர்களின் செயல்பாடுகள், முயற்சிகள் சற்று வினோதமாகவும், வித்தியாசமாகவும் காணப்படுகின்றன.
பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்
நடுவானில் திருமணம் செய்து கொண்ட தம்பதி
கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்
கருவறைக்குள் கொட்டாவி விட்ட குழந்தை
Back to HomePrintReport UsShare with Friends