திரையுலக பிரபலங்களின் பிரத்யேக பேட்டி!.. ரசிகர்களுக்காக

Published:Monday, 31 December 2012, 16:29 GMTUnder:Celebrity

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வாக Mega Night Live Show என்ற நிகழ்வு ரசிகர்களின் பேராதரவுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 23, 25, 26ஆம் திகதிகளில் சிறப்புடன் நடைபெற்றது.

இதில் உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா கலந்து கொண்டு ரசிகர்களை சந்தோஷத்தில் மூழ்கடித்தனர்.

மேலும் பிரபல பாடகர்களான ஸ்ரீனிவாஷ், ஸ்ரீலேகா பார்த்த சாரதி, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாய்சரண், பிரகதி குருபிரசாத் மற்றும் ஸ்வேதா கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தினர்.

இதில் சிறப்பம்சமாக ரசிகர்களுக்காக பிரத்யேக பேட்டியினை வழங்கியுள்ளனர்.

இப்பேட்டியில் சினேகா- பிரசன்னா பேசுகையில், ரசிகர்களின் பேராதரவுக்கும், இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.மேலும் இதுபோன்றதொரு ஆதரவை தங்களுக்கு எப்போதும் தருமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஸ்ரீனிவாஷ் கூறுகையில், தான் புதிதாக பாடல்களை இசையமைக்க இருப்பதாகவும், இதற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சாய்சரண், பிரகதி மற்றும் ஸ்வேதா, தங்களை போன்ற வளரும் கலைஞர்களை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி தெரிவித்தனர்.

Back to HomePrintReport UsShare with Friends

Find us on
Follow us
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்